Sunday, July 11, 2010

உருத்திரபுரம்.

2 கருத்துக்கள்

போருக்கு பின்னரான எனது கிராமம்...



10ம் வாய்க்கால்.... இரணைமடு குளத்திலிருந்து உருத்திரபுரம் கிராமத்தினூடாக பூநகரி குடமுறுட்டி கடலை சென்றடையும் வாய்க்கால். உருத்திரபுரம் கிராமத்தை ஊடறுத்து செல்லும் இந்த குட்டி ஆறு அந்த கிராமத்தின் தனி அழகு.


இரணைமடு குளம் இராணுவத்தால் பூட்டப்பட்டுள்ள நிலையில், பாவிக்கப்படாத இந்த வாய்க்கால் தூர்ந்து போயுள்ளதால் மழையால் வடியும் நீர் வீதிகளையும் கரையோர நிலங்களையும் அள்ளிக்கொண்டு வெள்ளைநிறத்தில் பாய்கிறது....


உருத்திரபுரம் விளையாட்டு மைதானத்தின் ஓர் எல்லை..... எல்லை கோடாய் ஓடும் குட்டி ஆறு..


சிங்கள ராணுவத்தின் எறிகணையில் சிதைந்து போய்கிடக்கும் என் வீட்டின் பின் பகுதி...
சிதைக்கப்பட்டிருப்பது படுக்கையறையும் படிக்கும் அறையும். என் குழப்படிகளை சேகரித்து வைத்திருந்த கோயில் இது.....
எங்கள் வீட்டில் கிளிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் தென்னை மரத்தின் தலைப்பகுதிதான் அறுத்தெறியப்பட்டு உக்கிக் கிடக்கிறது கூரையில்.


13-07-10
மா.குருபரன்

2 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க