Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Wednesday, June 11, 2014

எங்கே தவறு நடக்கிறது!!!! வாழ்தலுக்கு போதுமாக இல்லையா இவ் உலகின் வளங்கள்!!!

0 கருத்துக்கள்
புரிதல் இல்லாத வயதிலிருந்து துயரங்களை கடந்து போதல் இயல்பாகிவிட்டாலும், துயரங்களை அறியாத மனிதர்களுடன் பழகிய பிறகு எல்லாத் துயரங்களும் அச்சமூட்டுகின்றன.

தூசிபடியாத வீதிகள், அழுக்கேறாத ஆடைகள், அட்டவணையிடப்பட்ட இயந்திரவியல் வாழ்வின் மனிதர்களில் ஒருவராக நடிக்கப்பழகியபிறகு கடந்துவந்த துயரங்களும், காணும் அவலங்களும் எம்மை நடிகர்கள் என திரும்ப திரும்ப ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கின்றன.

பல்கலைக்கழகம் செல்ல முன்னர் நான் வாழ்ந்திருந்த தேசத்தில் பிச்சைக்காரர்கள் இருந்திருக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் பிச்சையெடுத்திருக்கவில்லை. அதனாலோ என்னமோ "பிச்சையிடுதல்" பிச்சை கேட்பவனின் இயலாமையை ஊக்குவிக்கும் செயற்பாடாக மனதினில் பதிந்தது.

வவுனியா தாண்டியபிறகு பிச்சையெடுத்தல் ஒரு தொழிலாகவே நடைபெறும் செயற்பாடு என்பது நாளுக்குநாள் புரியத்தொடங்கியது. பிச்சை கேட்பவர்கள் உபயோகிக்கும் அனுதாப உத்திகள், பையில் இருக்கும் சில்லறைகளை எடுத்துக் கொடுக்க தோணும். 2007 இல் நடந்த ஒரு கசப்பான அனுபவத்திற்கு பின்னர் "எவன் காலில் விழுந்து கதறினாலும் பிச்சையிடுவதில்லை" என்ற முடிவெடுத்திருந்தேன். இன்றளவும் பிச்சையிடுதல் "ஒருவனின் இயலாமையை ஊக்குவித்தல்" என்பதை மட்டுமே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இருக்கட்டும். பிச்சையெடுப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அது ஆட்சியாளரின் தோல்வி. அந்த அரசியல் எமக்கு தேவையில்லை.

ஆனால் நான் குளிருட்டப்பட்ட ஒரு அறையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில், எம்மொழி பேசக் கூடிய சக மனிதன் ஒருவன் வயிறுகாய்ந்து தெருக்களில் உறங்கிக் கொண்டிருப்பான். இந்தத் துயரம் இன்று நான் வாழும் சமூத்திற்கு புரிந்துவிடப்போவதில்லை. நாங்கள் காட்டிக் கொள்ளவும் விரும்புவதில்லை.

புறக்கோட்டையிலோ அல்லது பிறிதொரு நகரிலோ பிச்சையெடுப்பவர்களும் நாங்களும் ஒரே கடையில்தானே உண்போம். (2009 ற்கு பிறகுதான் வடகிழக்கில் பிச்சைக்காரர்கள் உருவாகினார்கள்). ஒரே பேருந்தில் தானே பயணம் செய்வோம். அதனால் அப்பொழுது சக மனிதனின் துயரம் உறுத்தியது கிடையாது.

இப்பொழுதெல்லாம் நிறையவே நடிக்கப் பழகிவிட்டோம்.

------------------------------------------------------------------------------------------------------

கீழே இருக்கும் புகைப்படங்கள் தமிழ்நாட்டின் தெருக்கள் மற்றும் கோயில்களில் நான் எடுத்தவை. நிட்சயமாக அந்த மனிதர்களுக்கு தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் இவை.

எங்கே தவறு நடக்கிறது!!!! வாழ்தலுக்கு போதுமாக இல்லையா இவ் உலகின் வளங்கள்!!!

வடபழனி, தமிழ்நாடு

சிறீரங்கம், தமிழ்நாடு

ஜந்துரதக் கோயில், தமிழ்நாடு
ஜந்துரதக் கோயில், தமிழ்நாடு



எல்லோரும் எம் மொழி பேசுபவர்கள்!!

நாங்கள் போக விரும்பாத தெருக்களில், நாங்கள் பார்க்க விரும்பாத சூழலில் எங்கள் சக மனிதர்கள் வாழுகிறார்கள். அவர்களை நாங்கள் செய்திகளாய் வாசிக்கிறோம்.

எங்கே தவறு நடக்கிறது!!!!


கொஞ்சக் காசாயினும் தங்கள் உழைப்பிற்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் இன்னும் சில மனிதர்கள் மேலே சொன்ன தெருக்களிலும் கோயில் சூழலிலும் இருக்கிறார்கள்!! அவர்களையும் வாசித்துவிட்டுப் போங்கள்...










மா.குருபரன்
11-06-2014



Wednesday, January 12, 2011

வெள்ளம்- மட்டக்களப்பு

0 கருத்துக்கள்
திருகோணமலை வீதி... பிள்ளையாரடிக்கு அருகாமையில்

திருகோணமலை வீதி... பிள்ளையாரடிக்கு அருகாமையில்

திருகோணமலை வீதி... பிள்ளையாரடிக்கு அருகாமையில்

திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி)

திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி)

புதுப்பாலத்தடி ஆறு நீர்நிரம்பி வீதிகளையும் நிறைத்து மனைகள் நிறைந்திருக்கும் பகுதிக்குள் புகுந்து கிடக்கிறது.


திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி)


திருகோணமலைவீதி மற்றும் வாவி வீதி சந்திக்கும் இடம் (ஊறணி)

ஊறணி பஸ்தரிப்பு நிலையம்
புகைப்படங்கள்: மா.குருபரன் 
பல ஆண்டுகளுக்கு பிறகு மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளப்பெருக்கால் பெரும்பகுதி மூடுண்டுகிடக்கிறது. பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். பாடசாலைகள் வைத்தியசாலைகள் மூடப்பட்டுவிட்டன. மட்டக்களப்பு மாவட்டம் கொழும்புடனான நேரடி தரைத்தொடர்பை இழந்து நிக்கிறது. வெகுவிரைவில் மழை நின்று வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
மா.குருபரன்
11-01-2011

Friday, January 7, 2011

என் ஊரில் பூத்திருக்கும் சில மலர்கள்

0 கருத்துக்கள்
மார்கழி மழையில் நனைந்து சிலிர்த்து நிற்கும் என் கிராமத்து மலர்கள் சில
படம் - மா.குருபரன்


படம் - தாரணி

படம் - தாரணி

படம்- தாரணி

 மா.குருபரன்

Sunday, December 5, 2010

மழை ஓய்ந்த ஒரு மாலைப்பொழுதில் வாவி - மட்டக்களப்பு

3 கருத்துக்கள்
மழை ஓய்ந்து நீர் வளிந்து கிடக்கும் ஒரு சில்லென்ற மாலைப்பொழுதில் என் கமராவில் சிக்கிய மட்டக்களப்பு வாவியின் சில அழகு காட்சிகள்



மா.குருபரன்
12-5-2010

Friday, November 12, 2010

பாசிக்குடா - மட்டக்களப்பு

2 கருத்துக்கள்
ஈழத்தின் மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற மற்றும் அழகான கடற்கரைகளில் ஒன்றுதான் இந்த பாசிக்குடா.  2010 ஆகஸ்ட் 08 ம் திகதி மாலை என் கமராவில் கிளிக்கானவை. படங்களை பெரிதாக்கி பார்க்க படத்தின்மேல் சொடுக்குங்கள்.










மா.குருபரன்
11-12-2010

Thursday, August 26, 2010

ஒற்றையடிப்பாதையில்...

8 கருத்துக்கள்
நித்திய கல்யாணி


துளசி

கொடி மஞ்சள் பூ

தோடங்காய்

அலரிப்பூ

அலரிப்பூ

குளிர்களி (ராஜா கடை)

கொடி மஞ்சள் பூ

பசளி

கொடி மஞ்சள் பூ (கைதடி முதியோர் இல்ல வளாகத்தில்)

மழை ஓய்ந்த அந்த நொடியில் (கைதடி முதியோர் இல்ல வளாகத்தில்)

Monday, August 16, 2010

இப்பவும் இனிக்கும் சிறுவர் காலம்..

4 கருத்துக்கள்
சாமான்கள் விற்கும் கடை.

மண் சோறுகறி சமைத்து விளையாடும் சிறவர்கள். தேவையான எல்லா பொருட்களும் இந்த கடையில் கிடைக்கும்.

கடையின் கஸ்டமஸ்...




புகைப்படங்கள் 08-08-2010 மாலை வாழைச்சேனையில் எடுத்தது.

எனக்கு இப்பவும் நாங்கள் சின்னனில் விளையாடிய மண்வீடு...மண் சோறுகறி.... பணமாக பாவி்த்த பாவட்டம் இலை.... சிரட்டையில் கட்டிய தராசு... வாகனமாகிய சையிக்கிள் றிம்..... நினைக்கும் போது இனிக்கிறது.

சிறுவர் தொழிலாளர்

0 கருத்துக்கள்
பாடசாலைக்கு செல்லவேண்டிய சிறுவன்.......

எத்தனையோ நிறுவனங்கள் இருந்தும் சிறுவர்களை வழிகாட்வோ அல்லது அவர்களுக்கு உதவவோ முழுமையாக செயற்படுகிறதா என்பது கேள்விக்குறியே!!!!