இந்த வீரர்களின்
கனவுகள் எதுபற்றி
பேசிக்கொண்டிருக்கும்???
உயிர் இல்லாது
போகக்போகும் அந்த நிமிடத்தில்
இந்த புருஷோத்தமர்களின்
நினைப்பு எதுபற்றி பேசியிருக்கும்...
கனவுகள் சிதைக்கப்பட்டு
பிணைக்கப்பட்ட கைகளோடு
வீசப்பட்ட மூலையில்
விடுதலைபற்றிய மூச்சோடு
தன் அம்மா பற்றிய ஏக்கமும்
அவள் பற்றிய துயரமும்
இறுக்கியபடியல்லவா இருந்திருக்கும்...
இப்படியல்லாம் செத்தபின்னும்
ஒட்டி வாழ் என்று
எமகு யார் உத்தரவிட முடியும்...
இவனை இப்படி
துடிக்க துடிக்க கொன்றவனோடு
இவன் அம்மா எப்படி வாழ்வாள்??
இவன் தம்பி எப்படி வாழ்வான்??
இரண்டாம் தாரமாய்
இவன் தங்கையை கட்டித்தா என்று
கொன்றவனனே கேட்பானே....
என்ன செய்வீர்...
இது கொலையா தற்கொலையா என்று
பேசி முடிவெடுக்க
உலகத்திற்கு
இன்னும் பலவருடங்கள் எடுக்கலாம்...
அதுவரையில் இதுபோல்
தற்கொலைக் கொலைகள்
நடந்துகொண்டுதான் இருக்கும்...
உடல் கிடைக்காது
உயிர் பறிக்கப்பட்டிருக்கும்...
மகன் மகள் பற்றிய ஏக்கத்தில்
அம்மா பித்துப்பிடித்துப்போய் இருப்பாள்...
சுடுபயிற்சிக்காய்
தமிழரின் உயிர்கள்
வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்...
ஆண்மையை சோதிக்க
தமிழச்சிகளின் கற்புகள் அடுக்கப்ட்டிருக்கும்...
எல்லாமே முடிந்தபின்
மீண்டும் இந்தியா...
புனர்வாழ்வு பற்றி
குளிரூட்டி அறைகளில் பேசிக்கொண்டிருப்பர்..
சிங்களமோ
தமிழரின் உயிர் பறிப்பு பற்றி
சிந்தித்துக்கொண்டிருக்கும்...
எதிர்ப்பதுஎன்று முடிவெடுத்தால்
தமிழரை தடைசெய்வது பற்றி
எல்லாருமே யோசிப்பர்....
ஹ்ம்.....
எது பற்றி பேசுவது!!!!!!!
மா.குருபரன்
26-10-10

நானும் எனக்குள் இதே கேள்விகளையே கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்......
(சில கண மகிழ்ச்சியிற்க்காக பலர் இவற்றை மறந்து விட்டனர் என்பது தான் கவலையான விடயம்.)
ம்.. நிட்சயமாக அர்ச்சனா... ஒட்டுமொத்த இனத்தின் விடுதலைக்காய் தமது உயிர்களை அணுவணுவாக பறிகொடுத்தவர்கள் இவர்கள்...பறித்தவனோடு நம்மவர்கள் கூத்தடிக்கும் போது வலிக்கிறது...
வருகைக்கு நன்றி அர்ச்சனா..