கனவுகள் கொண்டாடும்
இரவுகளுடன்
நகர்கிறது நாட்கள்..
செல்லமாய்
நீ மிரட்டும்
ஒவ்வொரு கணங்களும்
காதல் பருகி
கட்டுண்டு கிடக்கிறேன்
உன்னருகில்..
என் இரவுகளை திருடுகிறாய்....
மிட்டாய் கிடைத்த சிறுமியாய்
துள்ளிக் குதிக்கிறாய்....
தீண்டல்களாலும்
முத்தங்களாலும்
நனைந்து போன என் கனவுகள்,
உன் நினைவு மடியில்
தூங்கி விடுகிறது குழந்தையாய்...
மா.குருபரன்
3-9-2011
கனவுகள் கொண்டாடும்
இரவுகளுடன் - மா.குருபரன்.
மிக்க மகிழ்ச்சி!
:) :) :) :)
நன்றி மச்சான்.