கரடு முரடுகளாய்
நீண்டு கிடக்கும்
புற்களற்ற மலைத் தொடர்கள்..
அதன் மடியைத் தடவும்
கடலின் நுரைகளற்ற அலைகள்...
சூரியன் ஒளிந்து கொள்ள
இடுக்குகளற்ற வானம்...
இரவின் வெட்ககத்தில்
மறைந்து நிற்கும் நட்சத்திரங்கள்...
ரோஜாக்களின் வாசமறியாத குருவிகள்....
புன்னகைகளை மூடி மறைக்கும்
ராணிகள்...
ஆம்....
மனிதர்கள் வாழும்
ஒட்டக தேசமது....
மா.குருபரன்
23-04-2011
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க