நீ
கோடி மெளனங்களை மட்டுமே
பிரசவிக்கிறாய்
கருவைச் சுமக்கும்
தாய் போல
நீ
கருவை பத்திரமாய்
வளர்க்கிறாய்,
தெரிந்தும்
உன்பற்றிய நினைவுகளில்
பொழுகளை தொலைத்துவிடுகிறேன்
குழந்தை பராமரிப்புப் பற்றி
எந்த அக்கறையுமின்றி...
குழந்தை விளையாடவிருக்கும்
முற்றத்தில் கிடக்கும்
முட்களை பற்றி
எந்த அக்கறையுமின்றி அலைகிறேன்..
என்னிடம் எதுவுமே சொல்லாமல்
நீ
கோடி மெளனங்களை மட்டுமே
பிரசவிக்கிறாய்...
நம் முற்றத்தில்
என் அண்ணணும் தம்பியும்
இன்னமும்
குப்பைகளை
கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..
அயலவன் வீட்டுக் குப்பைகளையும்
அள்ளி
நம் முற்றத்தில்
கொட்டுகிறார்கள் இவர்கள்..
நம் வீட்டில்
ஒதுக்கப்படாத குப்பைகளை
அயலவனிடம் காட்டுகிறார்கள்
நம் வீட்டைப் பற்றி பேசுகிறார்கள்..
நீ
கோடி மெளனங்களை மட்டுமே
பிரவிக்கிறாய்...
மா.குருபரன்
27-04-2011
// நம் வீட்டில்
ஒதுக்கப்படாத குப்பைகளை
அயலவனிடம் காட்டுகிறார்கள்
நம் வீட்டைப் பற்றி பேசுகிறார்கள்..// தங்களை தக்க வைப்பதற்காக அடுத்தவனிடம் ஏதோ காரணங்களால் ஒதுக்கப்படாத குப்பைகளை காட்டுகிறார்கள். ....காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ம்.... காலம் பதில் சொல்லும். வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பரே..