Friday, December 2, 2011

நீ தின்று எஞ்சிய நினைவுகளுடன்...

3 கருத்துக்கள்


நீ தந்த காதலால்
சிறுபிள்ளையாய்
அந்த கடற்கரையில் கீறி விளையாடியிருக்கிறேன்..
இருள் மண்டி
மெளனம் விரிந்து கிடக்கும்
ஆற்றங்கரையில்
தனிமையில் காதல் மென்றிருக்கிறேன்..
முகிற் புகார்களுக்கிடையில்
நிலா ஒழிந்து விளையாடும் நாட்களில்
கண் சிமிட்டும் நட்சத்திரங்களை
ரசித்திருக்கிறேன்..
மழை ஓய்ந்த நாட்களில்
இலை வடியும் துளிகளை
விரல்களால் சேர்த்து மகிழ்ந்திருக்கிறேன்..
இரவுகளை தொலைத்திருக்கிறேன்..

ஏன் இத்தனை மாற்றம்
ஏன் இத்தனை காதல்
எந்த அளவு பிடிக்கும் என்று
சொல்லிக் காட்ட
என் மொழியால் முடியாதென்று திணறியிருக்கிறேன்!!!
அத்தனையும் தெரிந்தும்
மெளனமாய் விலகிச் செல்கிறாய்..

நீ தின்று எஞ்சிய நினைவுகளுடன் நான்

ப்ரியம் அத்தனை சுகமானது.. 

மா.குருபரன்

2-12-2011



3 கருத்துக்கள்:

  • December 2, 2011 at 3:10 AM

    /////ஏன் இத்தனை மாற்றம்
    ஏன் இத்தனை காதல்
    எந்த அளவு பிடிக்கும் என்று
    சொல்லிக் காட்ட
    என் மொழியால் முடியாதென்று திணறியிருக்கிறேன்////

    இந்த வரியை முகநூலில் யாரோ பகிர்ந்திருக்கக் கண்டேன் மிக்க நன்றி... அருமை...

  • December 2, 2011 at 11:22 AM

    மிக்க நன்றி சுதா... இது என்னுடைய வரிகளே!! இதே வரியை முதலில் யாரும் பகிர்ந்திருப்பின் தயவு செய்து சொல்லுங்கள். இங்கு எனது பக்கத்தில் எந்த நகலும் கிடையாது. அனைத்தும் எனது எண்ணங்களே!!

  • December 6, 2011 at 9:07 PM

    ஐயோ நீங்கள் தப்பாக விளங்கி விட்டீர்கள் போலும் உங்கள் கவிதையை ஒருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார் தனது பெயருடன் அதைத் தான் இட்டேன்..

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க