Tuesday, January 22, 2013

காதல்

0 கருத்துக்கள்


அந்தக் கோப்பையில்
கனவுகள் நிரம்பிக்கிடக்கும்

தெரியாத ஏதோ ஒன்றின் சங்கீதம்
இதமாக இசைத்துக் கொண்டே இருக்கும்

உதிர்ந்து கொண்டிருக்கும்
மலர்களை காணும் போதெல்லாம் - மனம்
மெளனமாய் அழுதுவிடும்

நினைவுகள் எப்போதும்
கற்பனைகளுடன் பேசிக் கொண்டேயிருக்கும்...

காதலின் வலி தெரியாதவர்களிற்கு
காதல் எப்பொழுதும் இப்படித்தானிருக்கும்

ஆம் காதல் கோப்பையில்
கனவுகள் நிரம்பிக்கிடக்கும்..


மா.குருபரன்
22-01-2013



படம் இணையத்தில் சுட்டது

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க