Wednesday, July 2, 2014

ஆண்டவன் வருவான்

0 கருத்துக்கள்

மூடனே!!
வீட்டில் வளரும் காந்தளை அழிப்பாய்
காட்டில் படரும் காந்தளை - என்ன
செய்வாய்..

காவலாளியில்லாத தோட்டத்தில்
புகுந்து
வேட்டைப்பல் வீரம் காட்டும்
ஓநாய்களே
வேள்விக்கு வளர்த்த ஆட்டைக் கூட
கோயிலில் வைத்து வெட்டுவதுதான் - எம்
பாரம்பரியம்..
ஆண்டவன் வருவான்
ஆண்ட அவன் வருவான்..

மா.குருபரன்
02-07-2014

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க