சதாமை பிடிப்பதாக கூறி இஸ்லாத்தை பின்பற்றும் சதாம் ஆதரவு சுனி சாதியினரை கொன்றுகுவித்தது அமெரிக்கா (சியா சாதியினர் காட்டிக் கொடுத்ததாக நம்பப்படுகிறது). பின்னர் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் ISIS என்ற இஸ்லாமிய அமைப்பை (சுனி சாதியினரை கொண்டது) உருக்கி அவர்களினூடாக இஸ்லாத்தை பின்பற்றும் சதாம் எதிர்ப்பு சியா சாதியினரை வெறித்தனமாக வேட்டையாடுகிறது.
ஆக ISIS என்ற அமைப்பு இஸ்லாமியர்களை மட்டுமே வேட்டையாட அமெரிக்க மற்றும் யூதனால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பு.
ISIS என்ற அமைப்பு தற்போது யாஷிடி என்ற அரபு இனத்தின் மீது மிருகத்தனமான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. யாஷிடி இன பெண்களை பாலியல் அடிமைகளாகவும் ஆண்கள் மற்றும் சிறுவர்களை உயிருடன் எரித்தும் தமது வெறியாட்டத்தை தொடர்கின்றனர்.
ISIS ஆல் துரத்தியடிக்கப்படும் ஈராக்கிய யாஷிடி இன மக்கள் |
இஸ்லாத்தை பின்பற்றும் சியா சாதிப்பிரிவு ஆண்களை சுனி சாதிப்பிரிவான ISIS அமைப்பு சிறுவர்களை கொண்டு கொலை செய்யும் புகைப்படங்களை வெளிட்டது உலகையே உலுக்கியிருக்கிறது.
மதத்தை தாண்டி தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே சிந்திக்க வலுவற்றவர்களாக அரேபிய இஸ்லாமியர்களை மதவெறியர்களாக்கி அதனூடாக அவர்களை சுக்குநூறாக்கி ஆளையாள் வெறித்தனமாக வேட்டையாடுவதை ரசித்துக் கொண்டிருக்கிறது வல்லரசுகள்.
ISIS என்ற அமைப்பால் தினம் தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கின்றன.
கொல்பவனும் அல்லாகு அக்ப்பர் என்கிறான் சாபவனும் அல்லாகு அக்பர் என்கிறான். இதைதான் யூதன் எதிர்பார்த்தது.
இஸ்லாமியர்களை தாண்டி ISIS கொலைவெறியாட்டம் மற்றும் பாலியல் வெறியாட்டம் வேறு இனத்தின் மீது தொடங்கும் போது மீண்டும் அரேபிய இஸ்லாமியர்கள் மீது பல நாடுகள் தமது வெறியாட்டத்தை தொடங்கும்.
"அரேபிய இஸ்லாமியர்களை, இஸ்லாமியர்களை வைத்தே அழித்தல் அது எல்லையை தாண்டி வந்தால் எல்லாருமாக சேர்ந்து அழித்தல்" இது தான் வல்லரசுகளின் கோட்பாடு.
மதத்தை தாண்டி இனமாக இணைய முடியாதவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். இது நன்கு திட்டமிடப்பட்ட செயற்பாடு.
ஆரம்பகாலத்திலத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கும் அரேபிய இஸ்லாமியர்களுக்கும் இடையில் இருந்துவரும் மத போர்களின் நவீன யுத்திதான் இன்று நடந்துவருகிறகு. மேற்கத்தைய கிறிஸ்தவர்கள் அறிவியல் ரீதியிலும் வளங்களிலும் வளர்ந்துவிட்டார்கள். அரேபிய இஸ்லாமியர்கள் மதம் மதம் மதம் என்பதை தாண்டி வெளியில் வந்து அறிவை வளர்த்துக் கொள்வதை விரும்பவில்லை.
---------------------------------------------------------------------------------------------------
சுதந்திர விடுதலைக்காக சகாப்தம் தாண்டி போராடிக்கொண்டிருக்கும் பலஸ்தீனியர்களை இஸ்லாமிய தீவிரவாதிகளாக காட்ட இஸ்ரேல் பல முயற்சிகளை எடுத்திருக்கிறது. ஆனால் பலஸ்தீனிய விடுதலை அமைப்பின் கட்டுக்கோப்பால் இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களை பலஸ்தீனிய விடுதலைப்போராட்டத்தில் கலக்கவிடாமல் இத்தனை வருடம்அவர்களால் போராட்டத்தை கொண்டு செல்ல முடிகிறது.
இலங்கை மற்றும் இந்தியாவில் பலஸ்தீன விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவழிப்பதாக சொல்லி பலர் "எல்லா யூதனையும் கொன்றொழிக்க வேண்டும்" "இது இஸ்லாத்திற்கான போர்" இப்படி வெறித்தனமாக கத்துகிறார்கள். ஆனால் நிட்சயமாக அவர்களுக்கு பலஸ்தீன விடுதலைப்போராட்டத்தின் பலம், தார்ப்பரியம் புரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
வல்லரசுகளுடன் போரிடுவதற்கு வெறுமனே வெறித்தனம் மட்டும் இருந்தால் போதாது அதற்கு முறையான, கட்டுக்கோப்பான, என்றுமே மாறாத இலட்சியம் கொண்ட பலமான நிர்வாக கட்டமைப்புக் கொண்ட அமைப்பு தேவை. அது பலஸ்தீனியர்களிடம் இருக்கிறது. தங்கள் மண்ணுக்காக போரிடும் வலிமை அவர்களிடம் இருக்கிறது. பலஸ்தீனியர்கள் மதத்திற்காக அல்ல மண்ணிற்காக போராடுகிறார்கள். பலஸ்தீன் என்பது கிறிஸ்தவர்களை சிறுபான்மையாக கொண்ட ஒரு தேசம். எல்லோரும் இணைந்துதான் போராடுகிறார்கள். இதனால்தான் பலஸ்தீன போராட்டத்தை இஸ்லாமிய தீவிரவாதமாக திசைமாற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது.
-------------------------------------------------------------------------------
இந்த நூற்றாண்டில் மதத்திற்காக தன் இனத்தையே அழித்த பெருமை இஸ்லாத்தையே சாரும்.
ஒரே மொழியைக் கொண்ட ஈராக்கியர்கள் "ஈராக்கியர்களாக" ஒன்றிணைய வேண்டும். ஒரே மொழியைக் கொண்ட சிரியர்கள் சிரியர்களாக ஒன்றிணைய வேண்டும்.ஒரே மொழியைக் கொண்ட லிபியர்கள் "லிபியர்களாக" ஒன்றிணைய வேண்டும். அது தான் பலம்.
லிபியர்களை ஒன்றுதிரட்டி முசோலினிக்கெதிராக போராடிய பாலைவனச் சிங்கம் உமர் முக்தரின் தேசம் இன்று இஸ்லாத்தின் பெயரில் தங்களைத் தாங்களே வேட்டையாடுகிறது.
"மதத்தால் இனத்தை உடைத்தல்" என்ற தத்துவம் இங்குதான் ஆரம்பிக்கபட்டிருக்க வேண்டும்.
அரபு தேசங்களுக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கட்டும். மத்தை தாண்டி இனமாக ஒன்றுதிரட்டக் கூடிய தலைவர்கள் கிடைக்கட்டும்.
மா.குருபரன்
16-08-2014
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க