யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விதம் விதமான நோய்களும் பதிவுகளில் வராத மரணங்களும் அதிகரித்திருக்கிறது.
எயிட்ஸ் நோயாளிகளே இல்லாதிருந்த ஊரில் எயிட்ஸ் நோயாளிகளும் வயது வேறுபாடின்றி விதம் விதமான புற்று நோய்களும் அதிகரித்திருக்கிறது.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இந்த மண்களில் விளைந்ததை மட்டும் உண்டு வளரும்வரை இத்தனை நோய்கள் வந்ததில்லை.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இத்தனை பாலியல் நோய்கள் வந்தததில்லை.
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அர்த்தமில்லாத சாவுகள் வந்ததில்லை.
என்ன நடந்ததது இந்த நிலத்திற்கு!!!!
கலப்படமில்லாத பொருட்கள் மக்களுக்கு கிடைக்க பயங்கரவாதிகள் என்ன செய்திருப்பார்கள்??
வீரியம் மிக்க விவசாயம் நடக்க பயங்கரவாதிகள் என்ன செய்திருப்பார்கள்??
மக்களை மனிதக் கேடையங்களாக்கி நோயற்ற சமுதாயத்தை வளர்க்க பயங்கரவாதிகளால் எப்படி முடிந்ததது?
---------------------------------------------------------------------------------
பயங்கரவாதிகள் இல்லாத இந்த ஊரில் இப்போது, ஊறுகாய்க்கும் கருவாட்டிற்கும் கூட மாற்றீடாக இரசாயண பதப்படுத்தபட்ட பொருட்கள் மாத்திரமே குறைந்த விலையில் மக்களுக்கு தாராளமாக கிடைக்கின்றன.பயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, இரசாயணத்தால் பழுக்கவைக்கப்ட்ட கவர்ச்சிகர பழங்கள் மாத்திரமே குறைந்தவிலையில் மக்களுக்கு தாராளமாக கிடைக்கின்றன.
பயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, மரத்தில் இருந்து பிடுங்கி ஒருவாரமாகியும் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கும் தம்புள்ள மரக்கறிகளே தாராளமாக மக்களுக்கு மலிவாக கிடைக்கிறது.
பயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, பாலியல் இச்சைகளுக்கு படுக்கையறைகள் தாராளமாக எங்கும் கிடைக்கின்றன.
பயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, பாடப்பரப்பிற்கு மீறிய பாலியல் கல்விகள் பதின்ம மாணவர்களுக்கு வலிந்து திணிக்கப்படுகிறது.
பயங்கரவாதிகள் இல்லா ஊரில் இப்போது, பிள்ளைகளை கட்டுப்படுத்தும் திறனை பெற்றோர்கள் இழந்துவருகிறார்கள்.
---------------------------------------------------------------------------------
பயங்கரவாதிகள் இருந்தபோது மாலை 6 மணிக்கு மேல் பிள்ளை வீடு வராவிடின் பதறியடித்து வீதியெல்லாம் அலைந்து திரிந்த பெற்றோர் இன்று தமிழக நாடகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.பாடசாலைப்பிள்ளை எதற்காக இத்தனை தாமதமென்றோ, சொல்லப்படும் காரணம் உண்மையானதென்றோ அறியும் ஆவல் பெற்றோருக்கு குறைந்து கொண்டே வருகிறது.
இது ஒன்றும் ஆச்சரியப்படும் வரலாறல்ல. நூற்றாண்டுகள் கடந்தும் தொடரப்படும் இன அழிப்பின் நுண்ணிய யுக்தி. சிந்தனைகளை திசைதிருப்புதல் மற்றும் தான்வாழும் சமுதாயத்தில் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாதபடி பொழுதுபோக்குகளிற்கு மக்களை அடிமையாக்குதல் என்பது காலாகலாமாக தொடரும் ஆழும் அரசுகளின் அரசியல்.
பிலிப்பின்ஸ் மக்கள் தமது கலாச்சாரத்தை தொலைத்து இன அடையாளத்தை தொலைத்து இன்று கூனிக்குறுகி நிற்பதற்கு காரணம் சுகபோகத்திற்கு அடிமையானது. பணத்திற்காக அமெரிக்க வல்லாதிக்கத்தின் பாலியல் தேவைகளுக்கு அடிமையானது.
போராடி விடுதலைபெற்று இன்று வீராப்புடன் நிமிர்ந்து எல்லா இனங்களுமே இப்படியான இன அழிப்பின் நுண் பக்கங்களை கடந்து வந்தவைதான் எனினும் இவ்வளவு வேகமான வீழ்ச்சியடைந்த இனங்கள், அடையாளங்களை இழந்து கலப்படமிக்க இனமாக மாறி நடைப்பிணங்களாக போனது தான் வரலாறு.
ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் மக்கள் புரிந்து கொள்ளதாபடி கவர்ச்சிகரமாகவும் ஏராளமான இன அழிப்பு யுக்திகள் மக்களிடத்தில் ஊடுருவவிடப்பட்டிருக்கிறது. இவற்றிற்கும் இன அழிப்பிற்கும் என்ன சம்மந்தம் என கேட்கலாம். இந்த தார்ப்பரியத்தை புரிந்து கொள்வது அத்தனை கடினமானதல்ல. போராடி வென்ற, போராடி தோற்ற இனங்களின் வரலாறுகளையும் 1900 களில் வாழ்ந்த கம்யூனிசுகளின் வரலாறுகளை வாசியுங்கள்.
(இன்று உலகமெல்லாம் இருக்கும் கம்யூனிச கட்சிகள் எல்லாமே போலியானவை. முதலாளித்துவ பணத்தில் இயங்குபவைதான் இன்றைய கம்யூனிஸ கட்சிகள் உ+ம் : இலங்கை, இந்தியா, சீனா, ரஸ்யா)
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சாத்தியமாக இருந்த "ஆரோக்கியமான சமுதாயம்" எப்படி ஜனநாயக அரசால் நாசமானது என்பதற்கு பதிலே இல்லை!!!
மா.குருபரன்
06-12-2014
0 கருத்துக்கள்:
Post a Comment
என்ன தோணுது... இங்க சொல்லுங்க