Tuesday, July 14, 2015

காதலும் கனவும்

1 கருத்துக்கள்
படம்-இணையம்

வானம் வெழுத்து
பகலைத் தின்னும்
இரவின்
வைகறை பொழுதொன்றில்
வெளிறிப் போகும் கனவுகளுடன்
கடற்கரையை
கடந்து கொண்டிருக்கிறேன்!!

மெல்லிய காற்று
கரைகளில் நுரையெழுப்பி
கால்களை நனைத்தபடி கடந்து
செல்கிறது!!

சொட்டுச் சொட்டய்
வெளிச்சம் ஒழுகியபடி
வானில் விழுகிறது நிலவு!!
நிறம் மாறிப் போன நீல வானில்
எத்தனை நட்சத்திரங்கள்!!

காற்றின் ஈரப்பதன்...
உடம்பு பூராவும் ஊரும்
கடலின் மெல்லிய இசை...
மௌனம் மண்டிக் கிடக்கும்
ஆட்களற்ற நீண்ட கடற்கரை..
காதலையும்
அதன் நினைவுகளையும் மென்றுவிட
இதைவிட வேறென்ன வேண்டும்!!

மா.குருபரன்
14-07-2015

1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க