Saturday, August 15, 2015

தேர்தல் காலத்தில் முகநூலில் எழுதிய அலைப்பறைகள்

0 கருத்துக்கள்
ஓகஸ்ட் 15 2015

தமிழீழ வரைபடத்தில் புத்தளம் மாவட்டம் இருக்கு ஆனா எல்லாரும் இணைந்த வடகிழக்க தான் தேசம் எண்டினம். ஏன் எண்டு தெரியுமா எண்டு ஒரு "சைக்கிள்" கார பெடியனிட்ட கேட்டன்.
என்னத்த யோசிச்சானோ தெரியாது. நான் கடைசி வரைக்கும் சைக்கிளுக்கு ஓட்டுப் போடவே மாட்டன் எண்டிற்றான்.
த.தே.ம.முன்னணி மாத்திரமல்ல த.தே.கூட்டமைப்பு கூட தமிழ்த் தேசிய நலனுக்காக இயங்கக் கூடியவை அல்ல. குறிப்பாக த.தே.ம.முன்னணியில் இருக்கும் இளசுகளுக்கு தமிழர் தேசம் எது? நிலப்பரப்பு எவ்வளவு என்ற அடிப்படை அறிவு கூட கிடையாது.
தேசத்தின் எல்லை எது அதன் அளவு எவ்வளவு என்றே தெரியாதவர்கள் தேசியம் பேசுவதைப் போல ஆபத்தான அரசியல் எதுவுமே இல்லை.
இப்போதிருக்கும் சூழலில் த.தே.கூட்டமைப்பை தெரிவு செய்வதுதான் புத்திசாலித்தனம் (புளொட் சரவணபவான் சுமந்திரன் எண்டு நிறைய பேர் இருந்தாலும் வேறு தெரிவில்லை)


ஓகஸ்ட் 14 2015த.தே.ம.முன்னணி என்ற ஜீ.ஜீ.பொன்னம்பலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் "தேசியத்திற்கு" ஆபத்தான "கட்சி".
தேசியம் பேசும் அளவிற்கு த.தே.ம.முன்னணியில் இருப்பவர்கள் பக்குவம் இல்லாதவர்கள்.
மண்ணை நேசிப்பவனுக்கு அம்பாறை-காங்கேசன்துறை-மன்னார் வரைக்கும் ஒரே மண் தான் ஒரே மக்கள் தான்.
‪#‎முதலில்‬ தேசத்தின் மண்ணையும் அதன் மக்களையும் நேசியுங்கள்

ஓகஸ்ட் 13 2015

த.தே.ம.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இப்போதுதான் வாசித்தேன். வெளிப்படையாக உணர்சிகரமாக "அறிக்கை" தயாரிக்கப்பட்டிருந்தாலும் "சட்டத் துறை கல்விமான்களால்" மிக நுட்பமாக "ஐசிங்" செய்யப்பட்ட த.தே.கூட்டமைப்பின் "கேக்" தான் இந்த விஞ்ஞாபனமும் என்பது தெளிவாக தெரிகிறது.
பூகோள அரசியல் பற்றிய பத்தியில் "பூகோள அரசியல்,தமிழ் மக்கள் இலக்கை அடைவதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகிறது" என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது எவ்வகையான வாய்ப்புகள் என்றோ இந்த வாய்ப்புகளின் பிராந்திய அரசியல் செல்லவாக்கு எப்படியென்றோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லலை.
தவிர "ஒரு நாடு இரு தேசம்" கொள்கையானது சாத்தியப்படுவதற்கு "அரச மீளுருவாக்கம்" அவசியமானது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அரசமீளுருவாக்கம் என்றால் என்ன?? இது இலங்கை என்ற நாட்டின் அரசியல் அல்லது அரச கட்டமைப்பு தானே!! இலங்கை நாட்டின் அரச கட்டமைப்பு "ஒரு நாடு இரு தேச கொள்கையில்" தாக்கத்தை செலுத்துகிறது என்றால் ஏன் மத்திய அரசின் ஐனாதிபதி தேர்தல் புறக்கணிப்பை த.தே.ம.முன்னணி செய்தது??
த.தே.ம.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமானது மேற்கத்தைய நிகழ்ச்சி நிரலின் அல்லது நலனின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது (நிறைய காரணங்களை சுட்டிக்காட்டலாம்). மேற்கத்தைய நிகழ்ச்சி நிரல் இனப்பிரச்சினையில் வலுவான தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை என்பது சிறிலங்கா அரசுக்கு மாத்திரமல்ல தமிழருக்கும் தெரியும் அதனால்தானோ என்னவோ அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
சரணடைந்த போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக போதுமான அளவு ஆதாரங்கள் இருந்தும் "இயலுமானவரை முயற்சிப்போம்" என்று முடித்திருக்கிறது த.தே.ம.முன்னணி. இந்த "இயலுமானவரை" என்பதன் அர்த்தம் அவர்களுக்கு மட்டுமே விளங்கலாம்.
"தாயகம், தேசியம், தேசம்" போன்ற சொற்கள் அடிக்கடி பாவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் தனித்தனி அர்த்தங்களை ஆறுதலாக தேடிப்பிடிக்கலாம்.
த.தே.கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் இந்திய நிகழ்சிநிரல் அடிப்படையிலானது. த.தே.ம.முன்னணியின் விஞ்ஞாபனம் அமெரிக்க&இங்கிலாந்து நிகழ்சிநிரல் அடிப்படையலானது. தமிழர்களின் அரசியல் பலம் சார்ந்து உருவாக்கப்பட்டவை போன்றே தெரியவில்லை.
‪#‎அடுத்த‬ 5 வருடம் தமிழர் உண்ணப் போவது வெறுங் கேக்கா ஐசிங் கேக்கா என்பது 18ம் திகதி தெரிந்துவிடும்


ஓகஸ்ட் 6 2015

வீட்டுக்கு மட்டுமே ஓட்டுப் போடு!!
த.தே.கூ குழப்பங்களால் நிறைந்திருந்தாலும், த.தே.ம.முன்னணி என்ற அரசியல் மாற்றீடாகாக முடியாது. சில பிரதேச மையவாதங்களை தாண்டி தமிழ்த் தேசியமாக சிந்திக்க கூடிய அனுபவம் த.தே.ம.முன்னணி வேட்பாளர்களிடம் இல்லை (அல்லது அந்த கட்சியிடம் இல்லாமல் இருக்கலாம்).
பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்ற தனி மனிதன் தெரிவாக இருந்திருந்தாலும் இப்போது நடப்பவை த.தே.ம.முன்னணி மீது நம்பிக்கையூட்டவில்லை.
‪#‎ஈழத்‬ தமிழர் "தேர்தல்" அரசியல் வரலாற்றிலையே கேவலமான பிரச்சார உத்திகள கையாண்ட பெருமை சைக்கிள் காரருக்குத்தான் கிடைக்கும் போல இருக்கு.


யூலை 30 2015

எங்கள சுற்றி என்னென்னமோ நடக்குது ஆனா எமக்கு எங்கட பிரதிநிதிகள் யார் என்றத தெளிவா கண்டு பிடிக்கேலாத நிலமையை காலம் உருவாக்கிவிட்டிருக்கு. 

எங்கட பிரதிநிதிகள் வந்து, இழுபறிகள முடிச்சு சிந்திக்க வெளிக்கிட அடுத்த தேர்தல் வந்திரும்.


#பிராந்திய, பூகோள அரசியல் நிலமை முன்பை விட வேகமாகவும், வெவ்வேறு நோக்கங்களோடும் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர் பிரச்சினை உதுகள்ல ஒரு சம்மந்தமும் இல்லாத மாதிரி மாயையை உருவாக்கி நாலு சுவருக்குள்ள பிரச்சினையை மறைக்கப் போறாங்கள் 
😁


0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க